11-ம் பொதுத்தேர்வு அரசாணையை ரத்து செய்ய கோரி வழக்கு: தமிழக அரசு பதில் மனுத்தாக்கல்_*
சென்னை: 11-ம் பொதுத்தேர்வு அரசாணையை ரத்து செய்ய கோரி வழக்கில் தமிழக அரசு பதில் மனுத்தாக்கல் செய்துள்ளது. நீட் போன்ற தேசியத் தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ள பாடத்திட்டம் மாற்றம் என அரசு பதிலளித்துள்ளது. நிபுணர் குழுவின் பரிந்துரைப்படி பிளஸ் 1 பொதுத்தேர்வு கொண்டுவரப்பட்டுள்ளது என அரசு தெரிவித்துள்ளது. 11-ம் வகுப்பு பொதுதேர்வு எழுதுவதால் மாணவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படும் என ரமேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். 11-ம் வகுப்பில் தோல்வியடையும் பாடத்தையும் 12-ம் வகுப்பில் தேர்வு எழுதி தேர்ச்சியடையலாம் என அரசு தரப்பு கூறியது. 11-ம் வகுப்பில் தோல்வியடையும் மாணவர்கள் 12-ம் வகுப்பு செல்வதில் எந்த தடையும் இல்லை என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment