நீட் தேர்வு தொடர்பான வழக்கு ஆகஸ்ட் 10ம் தேதிக்கு ஒத்திவைப்பு_*

டெல்லி : 
நீட் தேர்வு தொடர்பான வழக்கை ஆகஸ்ட் 10ம் தேதிக்கு டெல்லி உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.நீட் தேர்வு குறித்து மத்திய அரசும் சிபிஎஸ்இயும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மாநில மொழியில் நீட் தேர்வு எழுதியவர்களில் தேர்ச்சி பெற்றவர்கள் எத்தனை பேர் என்றும் தேர்ச்சி பெற்றவர்கள் விவரத்தை ஆகஸ்ட் 10ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

11-ம் பொதுத்தேர்வு அரசாணையை ரத்து செய்ய கோரி வழக்கு: தமிழக அரசு பதில் மனுத்தாக்கல்_*

11-ம் பொதுத்தேர்வு அரசாணையை ரத்து செய்ய கோரி வழக்கு: தமிழக அரசு பதில் மனுத்தாக்கல்_*

சென்னை: 11-ம் பொதுத்தேர்வு அரசாணையை ரத்து செய்ய கோரி வழக்கில் தமிழக அரசு பதில் மனுத்தாக்கல் செய்துள்ளது. நீட் போன்ற தேசியத் தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ள பாடத்திட்டம் மாற்றம் என அரசு பதிலளித்துள்ளது. நிபுணர் குழுவின் பரிந்துரைப்படி பிளஸ் 1 பொதுத்தேர்வு கொண்டுவரப்பட்டுள்ளது என அரசு தெரிவித்துள்ளது. 11-ம் வகுப்பு பொதுதேர்வு எழுதுவதால் மாணவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படும் என ரமேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். 11-ம் வகுப்பில் தோல்வியடையும் பாடத்தையும் 12-ம் வகுப்பில் தேர்வு எழுதி தேர்ச்சியடையலாம் என அரசு தரப்பு கூறியது. 11-ம் வகுப்பில் தோல்வியடையும் மாணவர்கள் 12-ம் வகுப்பு செல்வதில் எந்த தடையும் இல்லை என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வுக்கு மாணவர்கள் பயிற்சிபெற சி.டி

*🅱REAKING NEWS LIVE*


*📡 நீட் தேர்வுக்கு மாணவர்கள் பயிற்சிபெற சி.டி வடிவில் கையேடு வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.*


*📡சி.டி.கையேட்டில் 54ஆயிரம் கேள்வி-பதில்கள் இடம்பெறும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.*


BT's பணியிடங்கள்

👉08.08.17  இன்று 2017-18 கல்வி ஆண்டுக்கான 01.08.18 ன் நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் BT's
பணியிடங்கள் நிர்ணயம் செய்ய அனைத்து CEOகூட்டம் சென்னைDSE-ல் நடைபெற்று
உள்ளது.
👉01.08.Staff Fixation
அரசு/அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில்
நடை பெற உள்ளது

PG TRB IN COMPUTER SCIENCE: PGT COMPUTERSCIENCE STUDY MATERIALSystemSoftware ...

PG TRB IN COMPUTER SCIENCE:
PGT COMPUTERSCIENCE STUDY MATERIALSystemSoftware ...
: PGT COMPUTER SCIENCE STUDY MATERIAL System Software and Operating System Study Material Download புத்தகங்கள் பதிவிறக்கம் செய்திட இ...

அரசுப் பள்ளிகளில் 2,536 ஆசிரியர்கள் நியமனம் - பள்ளிக்கல்வித்துறை அனுமதி !

மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள, 2,536 பணியிடங்களை நிரப்பும் வரை, தற்காலிக ஆசிரியர்களை நியமித்துக் கொள்ள, பள்ளிக்கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது.
தமிழகத்தில், 2,500க்கும் மேற்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,645 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில், 2,536 பணியிடங்களை நிரப்புவதற்காக, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதற்கான தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட பணிகள்முடிந்து, ஆசிரியர்களை நியமிக்க குறைந்தபட்சம், நான்கு மாதங்களாகிவிடும். நடப்பு கல்வியாண்டில், பிளஸ் 1 வகுப்பும் பொதுத்தேர்வு என, அறிவிக்கப்பட்டுள்ளதால், ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள பள்ளிகளில், மாணவர்களின் கற்பித்தல் பணிகள் பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது.இந்நிலையில், காலிப்பணியிடங்களில், தற்காலிக ஆசிரியர்களை நியமித்துக் கொள்ள அனுமதியளித்து, பள்ளிக்கல்வித்துறை செயலர் உதயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

தமிழக அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள, 2,536 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை தேர்வு செய்து நிரப்பப்படும் வரை, ஜூன் முதல், செப்டம்பர் வரையுள்ள நான்கு மாதங்களுக்கு, தற்காலிக ஆசிரியர்களை பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் நியமனம் செய்து கொள்ளலாம்.அந்தந்த ஊர்களில், அந்தந்த பள்ளி அமைந்துள்ள பகுதி மற்றும் அருகில் உள்ள பகுதிகளில் வசிக்கும் தகுதி வாய்ந்த நபர்களை, நியமித்துக் கொள்ளலாம். பள்ளி தலைமை ஆசிரியர், மேல்நிலை வகுப்பு துணைத்தலைமை ஆசிரியர், ஒரு முதுகலை ஆசிரியர் கொண்ட தேர்வுக்குழு மூலம், நியமனம் செய்யப்பட வேண்டும்.இவர்களுக்கு தொகுப்பூதியமாக மாதந்தோறும், 7,500 ரூபாய்வழங்கப்படும். இதற்காக, தமிழகம் முழுவதும், 7.61 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கூறியுள்ளார்.

பிளஸ் 1 மாணவர்களுக்கு பழைய 'புளூ பிரின்ட்

பிளஸ் 1 மாணவர்களுக்கு பழைய 'புளூ பிரின்ட்'

பிளஸ் 1 தேர்வு மதிப்பெண், 100 ஆக குறைக்கப்பட்டுள்ள நிலையில், 200
மதிப்பெண்களுக்கு, 'புளூ பிரின்ட்' வழங்கப்பட்டு உள்ளதால், மாணவர்களும், ஆசிரியர்களும் குழப்பம் அடைந்துள்ளனர்.

  இது தொடர்பாக, ஆசிரியர்கள் கூறியதாவது: இந்த ஆண்டு முதல், பிளஸ் 1 மாணவர்களுக்கு, பொதுத் தேர்வு கட்டாயம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன், ஒரு பாடத்துக்கு, 200 மதிப்பெண் என, மொத்தம், 1,200 மதிப்பெண்களுக்கு தேர்வு நடந்தது. புதிய அறிவிப்பின்படி, ஒவ்வொரு பாடத்துக்கும், 100மதிப்பெண்கள் குறைக்கப்பட்டு, 600மதிப்பெண்களுக்கு மட்டுமே தேர்வு நடக்கும்.




ஆனால், தற்போது பள்ளிகளில் சேர்ந்த, பிளஸ் 1 மாணவர்களுக்கு, ஒவ்வொரு பாடத்துக்கும், 200 மதிப்பெண்களுக்கான, வினா பட்டியல் அடங்கிய புளூ பிரின்ட் வழங்கப்பட்டுள்ளது. அதனால், 100 மதிப்பெண்களுக்கு தயாராவதா; 200மதிப்பெண்களுக்கு தயாராவதா; வினாக்களின் வகை என்ன என, எந்த விபரமும் தெரியாமல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


🅱️🔥 *Flash News : பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் திடீர் மாற்றம்.*

பள்ளிக்கல்வித்துறை புதிய செயலாளராக தீரஸ் குமார் நியமனம். 5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விவகாரத்தில் எழுந்த அதிருப்தியால் பள்ளிக்க...